லாகூர் விமான நிலையத்தில் சக்கரம் இன்றி தரையிறங்கிய விமானம் – பரபரப்பு!
பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸின் ஒரு உள்ளாட்டு விமானம், லாகூர் விமான நிலையத்தில் பின்புற சக்கரங்களில் ஒன்றின்றி தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ச்சியளிக்கும் இந்த சம்பவத்திலும், விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதால் பயணிகள் யாருக்கும் எந்தவித சிரமமும் ஏற்படவில்லை.
கராச்சியிலிருந்து லாகூருக்கு புறப்பட்ட இந்த விமானம் தரையிறங்கியபோது, லேண்டிங் கியரில் உள்ள ஆறு சக்கரங்களில் ஒன்று இல்லை என்பதும், அது எப்போது விடுபட்டது என்பதும் பின்னர்தான் தெரியவந்தது. இந்த சக்கரம் கராச்சியிலேயே கழன்று விட்டதா, இல்லை தரையிறங்கும்போது பாதிக்கப்பட்டதா என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விமானம் புறப்படுவதற்குமே ஒரு சக்கரம் பழுதாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.