புகழ்பெற்ற பின்னணி பாடகி உமா ராமனன் காலமானார்!

0

அடையாறு, சென்னையில் வசித்து வந்த புகழ்பெற்ற பின்னணி பாடகி உமா ராமனன் (வயது 69) நேற்று காலமானார்.

தனது 35 ஆண்டு கலைப் பயணத்தில் மேடை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்தவர்.

6,000 மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். ‘பன்னீர் புஷ்பங்கள்’, ‘சீதலா’, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘தில்லுமுல்லு’, ‘திருப்பாச்சி’ உட்பட பல திரைப்படங்களில் தனது இனிமையான குரலை வழங்கி இருக்கிறார்.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு காலமானார். அவரது உடல் அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவருடைய மறைவு பாடும் உலகிற்கு பெரும் இழப்பாகும். இசை ஆர்வலர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.