கோலாலம்பூரில் பலத்த காற்று மற்றும் மழையால் சாலை முடக்கம்!

0

கோலாலம்பூரின் மையப்பகுதியில் உள்ள பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களுக்கு அருகே அதிக மழை பெய்த வேளையில், ஜாலன் பினாங் சாலையில் பெரிய மரமொன்று சரிந்து விழுந்ததில் சாலை முற்றிலும் முடங்கியது.

அருகில் இருந்த ‘ஒன் கேஎல்’ கட்டடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது மரம் விழுந்து நொறுங்கியதால் போக்குவரத்து பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.

கடந்த வாரம் இதேபோல் அருகிலேயே விழுந்த மரத்தால் கார்கள் சேதமடைந்தன, ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தற்போது இந்த சாலைப் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

நகராட்சி ஊழியர்கள் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி, மக்கள் இந்த பகுதிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில், நகரின் பிற பகுதிகளில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் நடந்த இதேபோன்ற சம்பவத்தில் ஒருவர் பலியானார், மேலும் இருவர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற விபத்துக்களை தடுக்க நகரம் முழுவதும் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.