ஜோஹோர் பாருவில் சாலை ரௌடித்தனம் – வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டார்!
ஜோஹோர் பாருவில் நடைபெற்ற சாலை ரௌடித்தனம் தொடர்பான வழக்கில் வெளிநாட்டினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 40 வயதுடையவர். மலேசியாவின் நெடுஞ்சாலை காவல்துறையின் குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) இவரை கடந்த பெப்ரவரி 12ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு பஹாங்கின் ஜெண்டிங் ஹைலேண்ட்ஸில் கைது செய்துள்ளது. அப்போது அவரது கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோஹோர் காவல்துறை தலைவர் ஆணையர் எம். குமார், சந்தேக நபர் பிப்ரவரி 14 வரை மூன்று நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மலேசிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 427ன் கீழ் தீமை விளைவித்தல் என்ற குற்றச்சாட்டின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தண்டனை பெற்றால், அவர் 1 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஆணையர் குமார், வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக் கொண்டார். மேலும், விசாரணைக்கு இடையூறு ஏற்படலாம் என்றார். குறிப்பாக விடுமுறை காலங்களில், சாலை பயனாளர்கள் பொறுமையுடனும், மற்றவர்களை மதித்தும் செயல்படுவது முக்கியம் என வலியுறுத்தினார்.
சம்பவத்தின்போது, பாதிக்கப்பட்டவருடைய கார் அவசர வழித்தடத்தில் சந்தேக நபரின் வாகனத்தைத் தடுத்து நிறுத்தியதால், ஆத்திரமடைந்த சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரின் காரின் பின்புற கண்ணாடியை உடைத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான 54 விநாடி வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, பெப்ரவரி 10ம் தேதி பிற்பகல் 2.36 மணிக்கு புகார் அளிக்கப்பட்டது.
image straits time