பயிற்சியின் போது பொதுமக்கள் பகுதியில்தவறுதலாக குண்டு வீசிய தென்கொரிய போர் விமானம்!
தென் கொரியாவின் போர் விமானம் ஒன்று மார்ச் 6ஆம் தேதி பயிற்சியின் போது தவறுதலாக பொதுமக்கள் பகுதிக்கு எட்டு குண்டுகளை வீசியது. இதில் ஏழு பேர் காயமடைந்தனர், அவர்களில் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்து வட கொரிய எல்லைக்கு அருகிலுள்ள போச்சியோன் நகரில் காலை 10:04 மணிக்கு நடந்தது.
வீசப்பட்ட எட்டில் ஒரு குண்டு மட்டுமே வெடித்தது, மற்ற ஏழு குண்டுகளை பாதுகாப்பாக அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்புக்காக அருகில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். சம்பவத்தினால் ஒரு தேவாலயம் மற்றும் சில வீடுகள் சேதமடைந்தன.
தென்கொரிய ஊடகங்களில் வெளியான புகைப்படங்களில் தேவாலயத்தின் சேதமடைந்த கூரையும், உடைந்த ஜன்னல்களும் காணப்பட்டன. அதிகாரிகள் விபத்தின் காரணங்களை விசாரித்து வருகின்றனர்.