சூடான் ராணுவ விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது 46 பேர் உயிரிழந்தனர்!

0

சூடான் ராணுவப் போக்குவரத்து விமானம் ஒன்று செவ்வாய்கிழமை இரவு வாடி செய்ட்னா விமான தளத்திற்கு அருகே குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 46 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.

சூடானின் தலைநகரான கார்ட்டூமுக்கு வடமேற்கில் உள்ள ஓம்டுர்மானில் உள்ள ஒரு முக்கிய இராணுவ மையமாக விமான தளம் உள்ளது. இராணுவ ஆதரவு அரசாங்கம் அமைந்துள்ள போர்ட் சூடானை நோக்கி விமானம் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் பல வீடுகள் சேதமடைந்ததுடன், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பயங்கரமான வெடிச்சத்தம் கேட்டதாகவும், விபத்து நடந்த இடத்தில் இருந்து அடர்ந்த புகை எழுவதைக் கண்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

அவசர குழுக்கள் உதவிக்கு விரைந்துள்ளனர், குழந்தைகள் உட்பட காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உயர்மட்ட அதிகாரிகள் விமானத்தில் இருந்தார்களா என்பதை ராணுவம் உறுதிப்படுத்தவில்லை.

விபத்து குறித்த முழு விவரங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.