பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து!
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையே உள்ள லிஃப்ட் கேபிள் அதிக வெப்பமடைந்ததால், தீ விபத்து ஏற்பட்டது.
பிரான்ஸ் தலைநகர் ஈபிள் கோபுரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று பார்வையாளர்கள் கூட்டம் அலைமோதியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 1,200க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை வெளியேற்றி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பாதுகாப்பு நடவடிக்கையாக, அதிகாரிகள் ஈபிள் கோபுரத்தை பார்வையாளர்களுக்காக தற்காலிகமாக மூடியுள்ளனர். பண்டிகைக் காலத்தில் இந்த திடீர் மூடல் பல சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
குறிப்பாக பாரிஸில் கிறிஸ்துமஸை அனுபவிக்க வெகு தொலைவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் .