புழு பூச்சிகளை உண்டு சிறுநீரைக் குடித்து உயிர் பிழைத்தேன்: காணாமற்போய் அமேசான் காட்டில் ஒரு மாதத்தின் பின்னர்
பொலிவியாவைச் சேர்ந்த 30 வயதான ஜொனாதன் அகோஸ்டா (ஜோனாதன் அகோஸ்டா) அமேசான் காட்டில் காணாமல் போன ஒரு மாதத்திற்குப் பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டார்.
கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி, தனது 4 நண்பர்களுடன் உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக்காடுகளான அமேசான் காடுகளுக்கு வேட்டையாடச் சென்றார். அந்த நேரத்தில், அகோஸ்டா அமேசான் காட்டில் தொலைந்து போனார்.
நண்பர்களுடனான தொடர்பையும் இழந்தார். இதனால், அகோஸ்டாவிடம் இருந்து எந்த தகவலும் இல்லாததால், அவரது குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அமேசான் காடுகளில் மீட்புக் குழுவினர் அவரை தேடினர்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அகோஸ்டா உடல் நலிவுற்ற நிலையில் மீட்கப்பட்டார்.
அமேசான் காட்டில் ஒரு மாதமாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்த அகோஸ்டா, அங்குள்ள பூச்சிகள் மற்றும் புழுக்களை தின்று பட்டினி கிடந்தார்.
மழை பெய்தால் காலணியால் தண்ணீர் பிடித்து குடிப்பார். தண்ணீர் கிடைக்காத சில இடங்களில் சிறுநீரை தானே குடித்து உயிர் பிழைத்ததாக கூறியுள்ளார்.
அகோஸ்டா காட்டில் இருந்து வெளியே வருவதற்காக தொலைந்து போகாமல் சுமார் 40 கிலோமீட்டர் தூரம் நடந்தார். இதனால் சுமார் 17 கிலோ உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியாக காட்சியளிக்கிறார்.
“நான் கடவுளிடம் மழை கேட்டேன், மழை பெய்யவில்லை என்றால் நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன்,” என்று அகோஸ்டா கூறினார்.
அவரது கூற்று உண்மையாக இருந்தால், அமேசான் மழைக்காடுகளில் இவ்வளவு காலம் உயிர் பிழைத்த ஒரே நபர் ஜொனாதன் அகோஸ்டா மட்டுமே.