ஆஸ்திரேலியாவிலிருந்து நியூசிலாந்து சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு – 13 பேர் மருத்துவமனையில் அனுமதி

0

ஆஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்கு புறப்பட்ட விமானம் ஒன்று இன்று (11.03.2024) பிற்பகல் 3:58 மணிக்கு வான்வெளியில் தொழில்நுட்ப கோளாறை சந்தித்துள்ளது.

இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்த 50 பயணிகள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆக்லாந்தில் தரையிறங்கிய பின்னர், காயமடைந்த பயணிகளுக்கு அவசர மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. இவர்களில் 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் விமானத்திலிருந்து ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.