டெய்லர் ஸ்விஃப்ட் இசை நிகழ்ச்சிக்குள் நுழைய முயன்றவர்களுக்கு உதவிய மூன்று பேர் கைது!

0

சிங்கப்பூரில் நடந்த டெய்லர் ஸ்விஃப்ட் இசை நிகழ்ச்சிக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாங் செங்குவாங் மற்றும் லி சியாவோ வேய் ஆகியோர் இந்த குற்றத்திற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி நடந்த தேசிய அரங்கில் நுழைவுச் சீட்டு இல்லாமல் நுழைய முயன்ற பலரை அரங்க நிர்வாகமான கல்லங் அலைவ் ஸ்போர்ட் மேனேஜ்மென்ட் கண்டறிந்து தடுத்துள்ளது.

உண்மையான நுழைவுச்சீட்டு வைத்திருக்கும் ரசிகர்களின் உதவியோடுதான் இந்த முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்றனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள். சங்ஹுவான் லின்மோ, ஹு ஜிஜுன் மற்றும் யாங் ஜுன்ஹாவோ ஆகியோரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மோசடி செய்ததற்காக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.

அத்துமீறி நுழைந்ததற்காக மூன்று மாதங்கள் வரை சிறை அல்லது 1500 சிங்கப்பூர் டாலர்கள் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

டெய்லர் ஸ்விஃப்டின் ‘தி எராஸ் டூர்’ நிகழ்ச்சிக்காக சிங்கப்பூர் வந்த ரசிகர்களின் கூட்டம் மூன்று லட்சத்திற்கும் அதிகம்.

நிகழ்ச்சியில் சட்டத்தை மீற முயல்பவர்களை அடையாளம் காட்ட ரசிகர்கள் அளித்த உதவிக்கு அரங்க நிர்வாகம் நன்றி தெரிவித்துக் கொண்டது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளின் பாதுகாப்புக்கு பார்வையாளர்களின் ஒத்துழைப்பே மிக முக்கியம் என அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த இசை நிகழ்ச்சி இன்னும் மூன்று நாட்களுக்கு தொடரவிருக்கிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.