கொடூரமான கொலை ஈழத் தமிழ் குடும்பம் ஒட்டாவாவில் படுகொலை பலியானவர்களின் விவரங்கள் வெளியாகின!

0

கனடா, ஒட்டாவாவில் இடம்பெற்ற சோகமான சம்பவத்தில் பலியானவர்களின் விவரங்களை கனேடிய பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த படுகொலையில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெப்ரியோ டி சொய்ஸா (வயது 19) என்ற இலங்கையைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களாக ஜீ கமினி அமரக்கோன் (40), தர்ஷனி பன்பரநாயக்க ஹாம வால்வ் தர்ஷனி திலந்திகா எகநாயக்கா (35), அவர்களின் பிள்ளைகளான இனுகா விக்ரமசிங்க (7), அஷ்வினி விக்ரமசிங்க (4), ரினியானா விக்ரமசிங்க (2), மற்றும் கெல்லி விக்ரமசிங்க (2 மாதம்) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பிள்ளைகளின் தந்தை உயிர் தப்பினாலும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார்.

பலியானவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதை ஒட்டாவாவில் உள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், கொலைக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

அண்மையில் இடம்பெற்ற இந்த சோகச் சம்பவம் குறித்து மேலும் விபரங்கள் வெளியாகும் வரை சமூகமே காத்திருக்கிறது.

image BBC

Leave A Reply

Your email address will not be published.