ஐந்து மாதங்களில் மூன்று பிரச்சனை! சிறை தண்டனை வாங்கிய சிங்கப்பூர் இளைஞர்.

0

சிங்கப்பூரைச் சேர்ந்த முஹம்மது ஹபீஸ் அயூப் என்ற 30 வயது இளைஞர் 2023 ஆம் ஆண்டில் ஐந்து மாதங்களுக்குள் மூன்று முறை சட்டப்பிரச்சனையில் சிக்கிக்கொண்டார்.

இவர் பொது இடங்களில் அமைதியைக் குலைத்தல், கடை வண்டியில் இருந்து திருடுதல், அடிதடி என தொடர்ந்து குற்றச்செயல்களைச் செய்துள்ளார்.

இதன் விளைவாக, ஆறு வார சிறை தண்டனையும், $2,800 அபராதமும் விதிக்கப்பட்டது. இது தவிர, இவர் மீது வேறு மூன்று குற்றச்சாட்டுகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

வழக்கறிஞர் இல்லாமல் நீதிமன்றத்தில் ஆஜரான ஹபீஸ், தன்னிடம் வெறும் 71 சென்ட் பணம் மட்டுமே இருப்பதால் அபராதம் செலுத்த முடியாது என்று கூறினார். இதனால், அபராதம் கட்டத் தவறினால், அவர் மேலும் மூன்று வாரங்கள் சிறையில் இருக்க வேண்டியிருக்கும்.

2021 ஆம் ஆண்டில் திருட்டுத்தொழிலுக்காக ஏற்கனவே சிறை தண்டனைஅனுபவித்திருப்பதோடு, பொது இட தொந்தரவுக்கும் அபராதம் கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தவறுகளுக்குப் பிறகும், நிரந்தர வேலை தேடிக்கொண்டு, இனி பிரச்சனையில் சிக்காமல் இருப்பதாக ஹபீஸ் உறுதியளித்தார். இருப்பினும், நீதிபதி ஹபீஸ் தொடர்ந்து சட்டங்களை மீறினால் தண்டனை இன்னும் கடுமையாக இருக்கும் என்று எச்சரித்தார்.

நீதிபதி அவர்கள், ஹபீஸின் இந்த திருட்டு குற்றச்சாட்டுக்கு முந்தைய தண்டனையை விட அதிக தண்டனை கிடைத்துள்ளது என்றும், தொடர்ந்து தவறு செய்தால் இன்னும் கடுமையான தண்டனை கிடைக்கும் என்றும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.