வரலாறு காணாத காட்டுத்தீ: லொஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் இடம்பெயர்வு!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க, 60 கனேடிய தீயணைப்பு வீரர்கள் உதவிக்காக அமெரிக்கா செல்ல உள்ளனர். இது குறித்து கனடாவின் அவசரகால தயார்நிலை அமைச்சர் ஹர்ஜித் சாஜன், “அமெரிக்க நண்பர்கள் உதவி கோரியுள்ளனர்” என தெரிவித்தார்.
அல்பர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்படும் என்றும், தேவைப்படும் மேலதிக உதவிகளை தேவையானபோது வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த காட்டுத்தீயால் கலிபோர்னியாவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இதுவரை 24 பேர் உயிரிழந்ததுடன், 300,000 மக்கள் இடம்பெயர்ந்து, 10,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.