திருமணநாள் பரிசு தராத கணவனைக் கத்தியால் குத்திய மனைவி கொலை முயற்சி!

0

பெங்களூரில் ஒரு பெண் தனது கணவரை அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது கத்தியால் குத்திய அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.

கணவருக்கு திருமணநாள் பரிசு வழங்காததால் இச்செயலை செய்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

சந்தியா என அடையாளம் காணப்பட்ட அந்த பெண், பிப்ரவரி 27 அதிகாலை தனது கணவர் கரணை தாக்கினார்.

கரண் அவரைத் தள்ளிவிட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர் உதவியுடன் கையில் ஏற்பட்ட காயங்களுக்கு மருத்துவ உதவி பெற்றுள்ளார்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து, சந்தியா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது தாத்தாவின் நினைவு தினமும் திருமணநாளும் ஒரே நாளில் வந்ததால், தனது மனைவிக்கு திருமணநாள் பரிசு வாங்கவில்லை என்று கரண் காவல்துறையினரிடம் விளக்கினார்.

திருமணநாளில் பரிசு பெறும் வழக்கத்தை கைவிட்டதால் கோபமடைந்த சந்தியா இச்செயலை செய்துள்ளார். இருவரும் குடும்பப் பிரச்சனை தொடர்பாக கவுன்சிலிங் பெற காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சந்தியாவின் செயலுக்கு உறவினர்களிடையே சில பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.