லண்டனில் புலம்பெயர்ந்தவர்களை இடமாற்றம் செய்வதற்கு எதிரான போராட்டம் 45 பேர் கைது!

0

லண்டனில் அகதிகளை ஒரு ஹோட்டலில் இருந்து படகு ஒன்றுக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின் போது, பிரிட்டிஷ் காவல்துறையினரால் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெக்காம் பகுதியில் போராட்டக்காரர்கள், அகதிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் டயர்களில் காற்றை அகற்றியதோடு, பேருந்தைச் சுற்றி வளைத்துக் கொண்டு தடுத்தும் உள்ளனர்.

செலவுகளைக் குறைக்கும் நோக்கில் அகதிகளை இவ்வாறு படகுகள் மற்றும் ராணுவ தளங்களில் தங்க வைக்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் திட்டமிட்டுள்ளார்.

ஆனால், ‘பிபி ஸ்டாக்ஹோம்’ என்ற இந்தப் படகு மிகவும் கொடுமையான சூழலைக் கொண்டுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பெக்காமில் நடந்த போராட்டத்தின் போது சில காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டனர், ஆனால் யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை. அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட அனுமதியுண்டு, அதே சமயம் காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையின் துணை ஆணையர் எச்சரித்துள்ளார். காவல்துறையினரை தடுத்தது, தாக்கியது போன்ற குற்றங்களுக்காகவே இந்த கைதுகள் நடந்துள்ளன.

அகதிகளை ஹோட்டல்களில் தங்க வைப்பது வரி செலுத்துவோருக்கு பெரும் செலவை ஏற்படுத்துகிறது என்றும், சமூக ஊடகங்களில் உள்ள ஒரு சிறிய போராட்டக் குழு கொள்கைகளை மாற்ற உதவாது என்றும் உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.