பெனாங்கில் வசிக்கும் பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் மீது கொதிக்கும் நீரை ஊற்றியதால் கைது!
பெனாங்கில் உள்ள ராஜவாலி சாலையில், டவுன் சிண்ட்ரோம் பாதிக்கப்பட்ட ஒருவர் மீது 39 வயது பெண் ஒருவர் கொதிநீர் ஊற்றியதாகக் கூறி போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.
அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இரவு 9:21 மணிக்கு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேற்கொண்டு விசாரணைக்காக சந்தேக நபரை போலீசார் காவலில் வைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட 33 வயது நபர், தனது 16வது மாடியில் உள்ள குடியிருப்புக்கு திரும்பும் போது, அவருக்கு வலது பக்கத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டன.
இந்த தாக்குதல் சம்பவம் நடந்த நேரத்தில், அந்த பெண்ணும் பாதிக்கப்பட்டவரும் மட்டும்தான் லிஃப்டில் இருந்ததை கண்காணிப்பு கேமரா உறுதி செய்துள்ளது.
பெனாங் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், கொதிநீர் தாக்கியதால் ஏற்பட்ட தீக்காயங்களுக்கு அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 324-ன் கீழ், ஆபத்தான ஆயுதங்களால் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக விசாரிக்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் இந்த சம்பவத்தின் வீடியோ பரவி பார்வையாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
அந்த பெண்ணின் இந்த செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட நபர் மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் நிலையான உடல்நிலையுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
image The star news