ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை சிங்கப்பூரில் எரிவாயு மற்றும் மின்சார கட்டணம் குறையும்!

0

சிங்கப்பூரில் எரிவாயு மற்றும் மின்சார கட்டணம், குறைந்த செலவுகள் காரணமாக, வரும் ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை குறைய உள்ளது.

SP குழுமத்தின் மூலம் மின்சாரம் பெறும் வீடுகள், மின்சார கட்டணத்தில் 0.3% குறைப்பைக் காண்பார்கள். இதன்படி அவர்கள் கிலோவாட் மணிக்கு (kWh) 29.79 சென்ட் செலுத்தினால் போதும் (GST-க்கு முன்). இது இப்போது இருக்கும் 29.89 சென்ட்டை விட குறைவாகும்.

HDB-யின் நான்கு அறை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, இது மாத மின்சாரக் கட்டணத்தில் சராசரியாக 33 சென்ட் குறைவாக வரும் என்று பொருள். இதன்படி பில் GST-க்கு முன் $98.18 ஆக இருக்கும்.

மொத்தத்தில், வணிக நிறுவனங்கள் உட்பட, மின்சாரக் கட்டணங்கள் சராசரியாக 0.4% அல்லது கிலோவாட் மணிக்கு 0.12 சென்ட் குறையும்.

இந்தக் குறைவு, மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் குறைந்த செலவுகளால் ஏற்படுகிறது. இந்தச் செலவுகள் எரிபொருள் மற்றும் மின் உற்பத்தி செலவுகளில் ஏற்படும் மாற்றத்திற்கேற்ப காலாண்டுக்கு ஒருமுறை சரிசெய்யப்படுகின்றன.

மேலும், அதே காலகட்டத்தில் நகர எரிவாயு (Town Gas) கட்டணமும் கிலோவாட் மணிக்கு 0.03 சென்ட் குறையும். இதனால், வீடுகள் கிலோவாட் மணிக்கு GSTக்கு முன் 23.12 சென்ட் செலுத்தினால் போதும், இது இப்போது 23.15 சென்ட்டாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.