சவுதி பூங்காவில் ராட்சத ராட்டினம் உடைந்து விழுந்து விபத்து 23 பேர் காயம்!
சவுதி அரேபியாவின் தாயிஃப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பொழுதுபோக்குப் பூங்காவில், புதன்கிழமை (ஜூலை 30) இரவு ‘ராட்சத ஊஞ்சல்’ 360 டிகிரி ராட்டினம் நடுவானில் உடைந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது.
ராட்டினம் அதன் உச்ச உயரத்திற்குச் சென்று ஆடிக்கொண்டிருந்தபோது, திடீரென உடைந்து தரையில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் இருபத்து மூன்று பேர் காயமடைந்தனர். அவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவர்களுக்குத் தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தைத் தொடர்ந்து, மாகாண ஆளுநர் இளவரசர் சவுத் பின் நயீஃப், விபத்து குறித்த விசாரணை முடியும் வரை பூங்காவை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளார்.