தெங்காவுக்கு புதிய மருத்துவமனை வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு சிறந்த சுகாதாரம்!

0

இன்னும் சில வருடங்களில் தெங்காவில் புதிய, அதிநவீன மருத்துவமனை ஒன்று திறக்கப்பட இருக்கிறது’ என்று சுகாதார அமைச்சர் ஓங் யி குங் அறிவித்துள்ளார்.

2030-களின் தொடக்கத்திற்குள் இம்மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கில் உட்லண்ட்ஸ், மத்தியில் சிங்கப்பூர் பொது மருத்துவமனை, கிழக்கில் விரைவில் பெடோக் வடக்கில் திறக்கப்பட உள்ள மருத்துவமனை வளாகம் ஆகிய சமீபத்திய மருத்துவ உள்கட்டமைப்பு மேம்பாடுகளோடு, இந்த புதிய மருத்துவமனையும் இணைகிறது.

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை அமைப்பின் (NUHS) கீழ் இயங்க இருக்கும் இந்த மருத்துவமனை, தெங்காவின் வளர்ந்து வரும் மக்கள்தொகையின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.

விரிவடையும் புதிய குடியிருப்பு பகுதியான தெங்காவில், 2025-ம் ஆண்டுக்குள் ஒரு பாலிக்ளினிக் திறக்கப்பட உள்ளது. இப்பகுதியில் மருத்துவமனை வசதியும் கொண்டு வருவதற்கான முடிவு, சிங்கப்பூரின் மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியே.

ஏற்கனவே உள்ள 11,000 மருத்துவமனை படுக்கைகளுடன் 2030-க்குள் மேலும் 4000 படுக்கைகளை சேர்க்கும் நோக்கம் உள்ளது. இதன் மூலம், மருத்துவமனைகள் நெரிசலின்றி செயல்படவும், அனைத்துப் பகுதிகளிலும் சிறந்த சுகாதாரச் சேவைகள் எளிதில் கிடைக்கவும் வழி ஏற்படும்.

இந்த வளர்ச்சிக்கு ஆதரவாக, உட்லண்ட்ஸ், செங்காங் பொது மருத்துவமனை, மற்றும் அவுட்ரம் சமுதாய மருத்துவமனைகள் கூடுதல் படுக்கை வசதிகளைப் பெறுகின்றன. சிங்கப்பூர் பொது மருத்துவமனை 2027-ஆம் ஆண்டில் 300 படுக்கைகளைக் கொண்ட தனித்தேர்வு பராமரிப்பு மையத்தைத் திறக்கிறது.

மறுசீரமைக்கப்படும் அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனையும் 2028 முதல் 2029 வரை படிப்படியாகத் திறக்கப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.