2024 இல் S Pass க்கு வந்துள்ள Quota வழிமுறைகள்! சம்பளம் எவ்வளவு கிடைக்கிறது?

0

2024-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் வேலைக்காக வரும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது.

S Pass, EPass, Work Permit, CPM, Shipyard Pass போன்ற பல்வேறு அனுமதிகளுடன் இவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைகிறார்கள்.

இந்த வகைகளில், S Pass என்பது அதிக சம்பள வாய்ப்பை வழங்குவதால் முக்கியத்துவம் பெறுகிறது.

S Pass எண்ணிக்கையில் மாற்றம்

ஆனால், 2024-ல், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே S Pass மூலம் சிங்கப்பூருக்குள் வர முடியும். இது சிங்கப்பூர் அரசாங்கத்தின் அனுமதி ஒதுக்கீடு முறை காரணமாக ஏற்பட்ட மாற்றம்.

வெளிநாட்டவர் உள்ளிட்ட பல்வேறு பணி வாய்ப்புகளுக்கு எவ்வளவு பேரை வேலைக்கு அமர்த்தலாம் என்பதை இந்த ஒதுக்கீடு முறை தீர்மானிக்கிறது.

உதாரணமாக, 100 பேருக்கு பணி வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், வெளிநாட்டவருக்கு குறிப்பிட்ட சதவீதமும், உள்ளூர் ஆட்களுக்கு மீதமும் ஒதுக்கப்படுகிறது.

அரசின் வரைமுறைகள்

தற்போது சிங்கப்பூர் அரசு பல்வேறு துறைகளுக்கும் இந்த அனுமதி ஒதுக்கீட்டை வரையறுத்துள்ளது. S Pass விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட சம்பளம் வாங்குபவர்களாக இருக்க வேண்டும். நிதித் துறையில் வேலை செய்பவர்களுக்கு குறைந்தபட்சம் SGD $3,650, மற்ற துறைகளில் SGD $3,150 சம்பளமாகப் பெற்றிருக்க வேண்டியது அவசியம். அத்துடன், இதை புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென்றால் SGD $3,000 சம்பளம் அவசியம்.

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு முதல் நிலை (Tier 1) அனுமதியாளருக்கு மாதம் SGD $550 வரியும், இரண்டாம் நிலை (Tier 2) அனுமதியாளருக்கு SGD $650 வரியும் விதிக்கப்படுகிறது.

கட்டண விவரங்கள்

ஒவ்வொரு S Pass பணியாளருக்கும், நிறுவனம் இந்த வரியை அரசுக்கு செலுத்த வேண்டும். தன் குடும்பத்தை சிங்கப்பூருக்கு அழைத்து வர விரும்புபவர் குறைந்தபட்சம் SGD $6,000 மாத சம்பளம் பெறுபவராக இருக்க வேண்டும்.

பல்வேறு கடும் கட்டுப்பாடுகளுடன் S Pass உட்பட பலவித அனுமதி வசதிகள் இருப்பதால், நல்ல சம்பளமும், சலுகைகளும் வழங்கக் கூடிய சரியான அனுமதியை தேர்வு செய்வது சிங்கப்பூருக்கு வருபவர்களுக்கு மிக முக்கியம்.

Leave A Reply

Your email address will not be published.