சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பிப்ரவரியில் 31 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றது, 28.2% அதிகரிப்பு!

0

பிப்ரவரி மாதத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குறிப்பிடத்தக்க அளவு பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பைக் கண்டுள்ளது. 31 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்.

இது கடந்த ஆண்டை விட சுமார் 28.2% அதிகமாகும். இவ்வளவு அதிக அளவில் பயணிகள் தேவை இருந்ததால், ஏர்லைன்ஸின் இருக்கைகளின் எண்ணிக்கையையும் 20.4% அதிகப்படுத்தி, தேவைக்கு ஏற்ப விமான சேவைகள் 20.7% கூடுதலாக இயக்கப்பட்டன.

சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆசியா முழுவதும் பயணிகள் எண்ணிக்கையில் பெரும் உயர்வை ஏற்படுத்தியது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் அதன் குறைந்த கட்டண விமானப்பிரிவான ஸ்கூட் ஆகிய இரண்டும் பயணிகள் நிரம்பும் விகிதத்தில் (load factor) சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 84.5% விகிதமும், ஸ்கூட் 92.6% விகிதமும் அடைந்தன. சரக்கு போக்குவரத்துப் பிரிவில், இணையவழி வர்த்தக வளர்ச்சியால், சரக்கு போக்குவரத்து 12.9% அதிகரித்துள்ளது.

பிப்ரவரி மாத இறுதிக்குள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் பயணிகள் வழித்தடங்கள் 121 இடங்களை உள்ளடக்கியதாகவும், சரக்கு வழித்தடங்கள் 126 இடங்களைச் சென்றடைந்ததாகவும் இருந்தது.

தனியாக, தரைக்கையாளும் நிறுவனமான Sats, 12.2 மில்லியன் டாலர்களுக்கு ஸ்வீடிஷ் விமான சரக்கு கையாளும் நிறுவனம் மற்றும் எல்லை ஆய்வு நிறுவனத்தையும் வாங்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ஸ்டாக்ஹோம் சந்தையில் தங்கள் நிலையை வலுப்படுத்தவும், சரக்கு கையாளும் திறன்களை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை உதவும்.

நிறுவனத்தின் உள்வளங்கள் மூலம் இந்த கையகப்படுத்தலுக்கு நிதியளிக்கப்படுவதால், நடப்பு ஆண்டின் நிதிநிலையில் இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது.
image the straits times.

Leave A Reply

Your email address will not be published.