தந்தையின் பதற்றம் தீர்ந்தது எமிரேட்ஸ் விமானத்தில் தனித்து விடப்பட்ட மகள் பாதுகாப்பாக சேர்ந்தார்!

0

மொராக்கோவில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய விமானத்தை 15 வயது சிறுமி ஒருவர் தவறவிட்டதால் பெற்றோருக்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த விஷயத்தை அறிந்த எமிரேட்ஸ் நிறுவனம் உடனடியாக அந்த சிறுமிக்கு உதவ முன்வந்தது. துபாய் வழியாக அவரது பயணத்தை மாற்றி அமைத்து கொடுத்தனர்.

சமீபத்தில் துபாயில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் விமான சேவைகள் குறைவாக இருந்த நிலையிலும், சிறுமியின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை உறுதிசெய்து பயணத்தை தொடர எமிரேட்ஸ் நிர்வாகம் உதவியது.

எமிரேட்ஸ் நிறுவனத்தின் உதவிகளால் பெருமூச்சுவிட்ட அந்த பெண்ணின் தந்தை, சமூக வலைதளங்களில் தனது நன்றியை தெரிவித்தார். விமானம் தவறியதிலிருந்து சென்னைக்கு வந்து சேரும் வரை, உணவு மற்றும் தங்குவதற்கான ஏற்பாடுகளை எமிரேட்ஸ் நிர்வாகம் செய்து கொடுத்ததாக குறிப்பிட்டார்.

பல சிக்கல்கள் இருந்தபோதிலும், எமிரேட்ஸ் நிறுவனத்தின் அர்ப்பணிப்பான உதவியால் சிறுமி பாதுகாப்பாக வீடு திரும்பியதாகவும் தெரிவித்தார்.

எமிரேட்ஸ் நிறுவனத்தின் பயணிகள் மீதான அக்கறை இந்த சம்பவத்தில் தெளிவாக வெளிப்படுகிறது. தக்க நேரத்தில் செயல்பட்டு, தகவல்களை தெளிவாக பரிமாறிக்கொண்டதன் மூலம் அவர்கள் அந்த சிறுமிக்கு சிறப்பான சேவை அளித்துள்ளனர்.

தந்தையின் சமூக வலைதளப் பதிவில், எமிரேட்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் பாராட்டைப் பெற்றுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.