சிங்கப்பூரில் புதிய பணிச்சூழல் நேர்மைச் சட்டம் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு வலுசேர்க்கிறது.

0

2024-ஆம் ஆண்டின் இறுதிக்குள் சிங்கப்பூர் தனது முதல் பணிச்சூழல் நேர்மைச் சட்டத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இது தொழிலாளர்கள் பணியிடத்தில் பாகுபாட்டிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய உதவும். ‘பணிச்சூழல் நேர்மைச் சட்டம்’ என்று அழைக்கப்படும் இந்த புதிய சட்டம், நிறுவனங்களுக்குள் பணியாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையேயான பிரச்சனைகளைத் தீர்க்க நியாயமான நடைமுறைகளை வகுக்க வேண்டும். இது சிங்கப்பூர் பணியிடங்களில் நேர்மையையும் இணக்கத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பணியிடக் குறைகளைக் கையாள்வது பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பணியிடக் குறைகளைக் கையாள்வது பற்றி ‘நியாயமான மற்றும் முற்போக்கான வேலைவாய்ப்பு நடைமுறைகளுக்கான முத்தரப்பு கூட்டணி’ (TAFEP), அடிக்கடி கேட்கப்படும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளது. குறைதீர்ப்பு மேலாண்மை என்பது, பணியிடத்தில் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதாக ஊழியர்கள் முறைப்பாடுகளை முறையாக தெரிவிப்பதைக் கையாளுவதை உள்ளடக்கியது. முறையான நடைமுறைகளை வகுப்பதன் மூலம், பழிவாங்கப்படுமோ என்ற அச்சமின்றி ஊழியர்கள் தங்கள் கவலைகளைத் தெரிவிக்க பாதுகாப்பான இடத்தை முதலாளிகள் உருவாக்குகின்றனர். அத்துடன் தங்கள் முடிவுகளை விளக்கும் வாய்ப்பையும் முதலாளிகள் பெறுகிறார்கள்.

செய்முறைக் கொள்கையை வகுத்தல்

எது குறைபாடு என வரையறுக்கும், குறைதீர்க்கும் செயல்முறையின் வழிமுறைகள், ஊழியர்களின் தகவல் ரகசியம் ஆகியவற்றை உள்ளடக்கிய கொள்கையை முதலாளிகள் வகுக்க வேண்டும். இந்தக் கொள்கையை கையேடுகள், கூட்டங்கள், ஒப்பந்தங்கள் போன்ற பல்வேறு ஒப்பந்தங்கள் போன்ற பல்வேறு வழிகள் மூலம் அனைத்து ஊழியர்களுக்கும் தெரியப்படுத்துவது முக்கியம். மேலும், குறைகளைக் கையாண்டு, பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு முடிவுகளைத் தெரிவித்து பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு மேற்பார்வையாளர்கள் உரிய பயிற்சி பெற்றிருப்பதை முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும். உள்நாட்டிலேயே பிரச்சனைகளைத் தீர்க்க முடியாத நிலையில், ஊழியர்கள் TAFEP-யிடம் ஆலோசனை பெறலாம்.

Leave A Reply

Your email address will not be published.