சிங்கப்பூரில் சகோதரன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய பெண்ணுக்கு 7 மாதம் சிறை

0

.

சிங்கப்பூரில், தனது 25 வயது சகோதரன் உறங்கிக் கொண்டிருந்தபோது, அவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய 21 வயது பெண்ணுக்கு ஏழு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் அவர்களின் வீட்டில் நடந்தது.

தாக்குதலுக்கான சரியான காரணம் வெளியிடப்படவில்லை என்றாலும், அந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் இல்லை என்பதை நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் 24, 2023 அன்று, அந்தப் பெண்ணின் தாய், சமையலறையில் எண்ணெய் சூடாக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அவர் இதுபற்றி மகளிடம் விசாரித்தபோது எந்த பதிலும் வரவில்லை.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்தப் பெண் தனது சகோதரனின் அறைக்குச் சென்று அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார்.

பலத்த தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட அவரது சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், தற்போது அவர் குணமடைந்துள்ளார்.

அந்தப் பெண்ணுக்கு எந்த மனநலக் கோளாறும் இல்லை என்று மனநல நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், அவருக்கு முதிர்ச்சியற்ற ஆளுமையும், தனது செயல்களுக்கு வருத்தமும் இல்லை.

பாதிக்கப்பட்டவரிடம் எதிர்காலத்தில் வன்முறை நிகழும் அபாயம் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.